கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென காங்கிரஸ், சிபிஐ,மார்சிக்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. அந்தோனியின் மகன் அனில் அந்தோனி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் பத்தினம்திட்டா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ அந்தோனிக்கு எதிராக பாஜக வேட்பாளராக அனில் அந்தோனி களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே. அந்தோனி கூறியதாவது: எனது மகனும் பாஜக வேட்பாளருமான அனில் தோற்க வேண்டும்,. காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ மீண்டும் வெற்றி பெற்ற வேண்டும் என்று கூறினார்.
மேலும் காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் பாஜகவில் இணைவது தவறானது, காங்கிரஸ்தான் எனது மதம் என்று கூறினார்