ஆந்திரா கவர்னருக்கு ஒரு தாய் தன் மகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
விஜயவாடாவைச் சேர்ந்த ஸ்வர்ணலதா என்பவருக்கு, ஜானவி என்னும் மனநல பாதிக்கப்பட்ட மகள் உள்ளார். 2000 ஆம் ஆண்டு பிறந்த ஜானவிக்கு 4 வயது முதல் உளவியல் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 8 வயது முதல் ஜினிக் என்னும் கோளாறு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்வர்ணலதாவின் கணவர் ஒரு மருத்துவமனையில் மூத்த உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். அந்த மருத்துவமனையில் தான் ஜானவிக்கும் சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே அந்த மருத்துவமையில் உளவியல் துறையின் தலைமை மருத்துவராக ராஜ்ய லட்சுமி என்பவர் புதிதாக பொறுப்பேற்றார். அவர் ஜானவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து ஜானவியின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் அதன் பிறகும் சிகிச்சை அளிக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து ஆந்திர கவர்னர் பிஸ்வாபூசன் ஹரிசந்தனுக்கு ஸ்வர்ணலதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ”அந்த மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் இல்லையெனில் என் மகளை கருணை கொலை செய்ய அனுமதியளியுங்கள் என எழுதியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.