Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவி நேரலையில் பெண் வக்கீலை தாக்கிய நபர் கைது

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (13:16 IST)
டிவி நேரலையின் போது பெண் வக்கீலை தாக்கியதற்காக மவுலானா இஜாஸ் அர்ஷாத் கஸ்மி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சில தனியார் செய்தி நிறுவனங்கள் சமூக அக்கறை கொண்ட ஆட்களையும் அரசியல் வாதிகளையும் வரவழைத்து டிவியின் நேரலையில் விவாதிக்க வைப்பது வழக்கம். அப்போது ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லுவார்கள்.
 
அப்படி ஜீ இந்துஸ்தான் தொலைக்காட்சியில், நேரலையில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் முத்தலாக் குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முத்தலாக்கை எதிர்த்துப் போராடும் பெண் வக்கீலான பராஹ் பைஸ் பங்குபெற்றார். மேலும் மவுலானா இஜாஸ் அர்ஷாத் கஸ்மி உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
 
அப்போது பேசிய பெண் வக்கீல் முத்தலாக் குர்ஆனில் அங்கீகரிக்கப்பட்ட விவாகரத்து அல்ல என பேசினார். இதனால் கோபமடைந்த மவுலானா அந்த பெண் வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் மவுலானாவை அந்த பெண் வக்கீல் கன்னத்தில் அறைந்தார். இதனால் கோபமடைந்த மவுலானா அந்த பெண் வக்கீலை பதிலுக்கு தாக்கினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 
 
இதனையடுத்து  டிவி நிர்வாகத்தினர் மவுலானா மீதுகாவல் துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், மவுலானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments