வாட்ஸ்அப்பில் நாட்டு மக்களின் ஆதார் தகவல்கள் ரூ.500க்கு விற்படுவதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாம் மாநிலத்தில் வெளிவரும் தி ட்ரிபியூன் இந்தியா என்ற பத்திரிகை மேற்கொண்ட ஆய்வில் ஆதார் தகவல்கள் விற்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.500 கொடுத்தால் ஆதார் தகவல்களை தருவதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த பத்திரிகையில் பணிபுரியும் நபருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதைக்கண்ட அதிர்ச்சி அடைந்த செய்தியாளர் இதுகுறித்த விசாரணையில் இறங்கினார். அதன்படி பேடிஎம் மூலம் ரூ.500 அனுப்பியுள்ளார். உடனே செய்தியாளருக்கு ஒரு ஆதார் தகவல்கள் குறித்த இணையதளம் மற்றும் அதன் கடவுச் சொல் வந்துள்ளது.
அந்த இணையதளத்தில் கோடிக்கணக்கான மக்களின் ஆதார் எண்கள், வீட்டு முகவரி என அனைத்து தகவல்களும் இருந்துள்ளது. இதையடுத்து அந்த செய்தியாளர் சண்டிகர் பகுதி தேசிய தனிநபர் அடையாள ஆணையத்திடம் புகார் அளித்தார்.
தற்போது இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்று எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுபோன்று வெறும் 500 ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தேசிய தனிநபர் அடையாள ஆணைய விளக்கம் அளித்துள்ளது.