Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் கட்டத்திலேயே உச்சத்திற்கு சென்ற ஆம் ஆத்மி: டெல்லி வாக்கு எண்ணிக்கை

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (08:25 IST)
முதல் கட்டத்திலேயே உச்சத்திற்கு சென்ற ஆம் ஆத்மி
டெல்லியில் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது 
 
பலத்த பாதுகாப்புக்கு இடையே வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் தற்போது முதல்கட்ட முடிவுகள் வெளிவந்துள்ளது. இதன்படி ஆம் ஆத்மி 25 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகவும் பாஜக 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது
 
மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு 36 தொகுதிகள் கிடைத்தாலே ஆட்சி அமைத்து விடலாம் என்ற நிலையில், முதல் கட்ட வாக்குப் எண்ணிக்கையிலேயே 25 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியை முன்னிலையில் இருப்பதால் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments