Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அடுத்து பினாமி பரிவர்த்தனையில் ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்து: அதிரடி காட்டும் வருமான வரித்துறை!!

அடுத்து பினாமி பரிவர்த்தனையில் ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்து: அதிரடி காட்டும் வருமான வரித்துறை!!
, வியாழன், 16 நவம்பர் 2017 (11:34 IST)
மத்திய அரசு கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துகள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை வருமான வரித்துறையின் மூலம் எடுத்து வருகிறது.


 
 
இந்நிலையில் அடுத்து பினாமி சொத்துகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்துகள் வாங்குவது கண்காணிக்கப்படும் என்று மத்திய நேரடி வரி ஆணையம் அறிவித்துள்ளது. 
 
சமீபத்தில் கணக்கில் வராத பண பரிவர்த்தனையை மெற்கொள்ள தொடங்கப்பட்ட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட செயல்பாட்டில் இல்லாத நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிறுவனங்களின் 621 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

தற்போது வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விவரங்களில் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் பினாமி பரிவர்த்தனை சட்டப்படி சோதனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 24 மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்ற 36 வயது பெண்!