மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று திடீரென விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த டிராக்டர் பேரணியின் போது வன்முறை வெடித்ததால் போலீசார் மற்றும் விவசாயிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு சிலர் காயமடைந்தனர்.
இந்த ட்ராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து என்பவரை டெல்லி போலீசார் தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்
டெல்லியில் குடியரசு தின விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டிய வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன