Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரியனை நெருங்கும் ஆதித்யா எல்-1; இறுதி சுற்றுவட்டப்பாதையில்..! – இஸ்ரோ தகவல்!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (09:29 IST)
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக 4வது சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.



சந்திரயான் திட்டம் மூலம் சந்திரனில் கால்பதித்த இஸ்ரோ அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா திட்டத்தில் இறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பூமியை 4 சுற்றுவட்டப்பாதைகளில் சுற்றி விரிவடைந்து சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான எல்-1 பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்.

இதற்கான சுற்றுவட்டப்பாதை உயர்த்துதலில் 4வது சுற்றுவட்டப்பாதைக்கு ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து ஆதித்யா எல்-1 விலகி லக்ராஜியன் புள்ளி ஒன்றிற்கு அனுப்பப்படும் பணிகள் அக்டோபர் 19ம் தேதி தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments