கடந்த சில நாட்களுக்கு முன்னால் இஸ்ரோ விஞ்ஞானிகளால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் ஒன் என்ற விண்கலம், புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து பிரிந்து தற்போது சூரியனின் லெக்ராஞ்சியன் என்ற புள்ளியில் பயணத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 வெற்றி கரமாக தனது பயணத்டஹி செய்து வருகிறது என்பதும் இதுவரை புவியின் சுற்றுவட்ட பாதையில் பயணித்து வந்த இந்த விண்கலம், தற்போது சூரியனின் சுற்றுவட்ட பாதைக்கு மாறி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் ஆதித்யா எல் ஒன் விண்கலம், இன்னும் 110 நாட்களில், எல்1 சுற்றுவட்ட பாதையை அடையும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது