திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து பல நிறுவனங்களின் நெய்யும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து மக்களுக்கு நெய் மீதான பீதி உருவாகியுள்ளது. இந்நிலையில் பல மாநில அரசுகளும் பல நிறுவனங்களின் நெய்யின் தரத்தை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.
அவ்வாறாக கேரளாவில் அங்கு அதிகம் பயன்படுத்தப்படும் நிறுவனங்களின் நெய் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஜோய்ஸ், மேன்மா, எஸ்.ஆர்.எஸ் ஆகிய 3 நிறுவனங்களின் நெய் தயாரிப்பில் தாவர எண்ணெய், வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
அதை தொடர்ந்து அந்த 3 நிறுவனங்களின் நெய் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கேரளாவில் தடை விதித்து கேரள மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Edit by Prasanth.K