Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காஷ்மீருக்காக இந்தியா - பாக். மத்தியில் போர் பதற்றம்?

காஷ்மீருக்காக இந்தியா - பாக். மத்தியில் போர் பதற்றம்?
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (09:26 IST)
ஜம்மு காஷ்மீரில் அசாதரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. 
 
ஜம்முவில் நேற்று நள்ளிரவு முதல் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
பள்ளிகள், கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
webdunia
மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோன் ஆகியோர் நள்ளிரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், ஸ்ரீநகரில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காஷ்மீரின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் காஷ்மீரின் தனி அடையாளத்தை இழக்கமாட்டோம் என ஒருமித்த குரலில் உறுதி ஏற்றுக் கொண்டன.
webdunia
மேலும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கேட்டுக்கொண்டது பின்வருமாறு... 
 
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தி அமைதியைக் குலைக்கும் எந்த ஒரு செயலிலும் இருநாடுகளும் ஈடுபடக்கூடாது. இருநாடுகளும் அமைதி காக்க வேண்டும் என அமைதிக்கான அழைப்பை விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதளபாதாளத்தில் ஆட்டோமொபைல்ஸ் – 2 லட்சம் பேர் வேலையிழப்பு !