Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னிபாத் விமானப்படையில் சேர 7.49 லட்சம் விண்ணப்பங்கள்! – விமானப்படை அறிவிப்பு!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (10:05 IST)
சமீபத்தில் இந்திய ராணுவம் அறிவித்த அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகால தற்காலிக பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் பலர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு எழுந்தது. எனினும் இந்த திட்டத்தில் சேர்வதற்கான அறிவிப்புகளை இந்திய ராணுவம் வெளியிட்டது.

அதன்படி அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24ம் தேதி முதல் பெறப்பட்டன. விமானப்படையில் சேர்வதற்கு முதல் நாளில் மட்டும் 3,800 பேர் விண்ணப்பித்திருந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது மொத்தமாக இந்த திட்டத்தில் பணியில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முந்தைய காலத்தில் 6.31 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்த நிலையில் அக்னிபத் திட்டத்தில் அதிக அளவிலான இளைஞர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments