Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடங்கியது ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ!!

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (13:22 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும்  நிலையில் டெல்லியில் சில பகுதிகளில் ஏர்டெல் மற்றும் வோடபோன் தனது சேவையை முடக்கியுள்ளது. 
 
சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர்   போராடி வருகின்றனர்.
 
போராட்டம் நடைபெறும் இடங்களில் வன்முறை வெடிப்பதால் நாட்டில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கலவரம் ஏற்படலாம் என கருதப்படும் பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஏர்டெல் மற்றும் வோடபோன் சேவைகள் செயல்ப்பாட்டில் இல்லை என புகார் எழுந்த் நிலையில், மத்திய அரசின் உத்தரவால் டெல்லியில் சில பகுதிகளில் கால், எஸ்.எம்.எஸ் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இது குறித்து எந்த தகவலும் வெளியிடாத நிலையில் அந்நிறுவனத்தின் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

அடுத்த கட்டுரையில்
Show comments