ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இதனை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் சமாதிவாடி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியை உறுதி செய்யவும் ஜாதி பாகுபாடுகளை முற்றிலும் தடுக்கவும் ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு சாதியின் கீழ் உள்ள மக்களின் உண்மையான எண்ணிக்கை தெரியாமல் அவர்களுக்கான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் முழுமை பெறாது என்றும் பீகாரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்போது உத்தரபிரதேசத்தில் ஏன் சாத்தியம் இல்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.