இந்திய பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், கொல்கத்தாவில் யாரும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறி தான் கேட்டதில்லை என கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய பொருளாதார நிபுணர் மற்றும் தத்துவயியலாலரான அமர்த்தியா சென், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, ‘இதற்கு முன் கொல்கத்தாவில் ஜெய் ஸ்ரீராம் என யாரும் கூறி தான் கேட்டதில்லை எனவும், சமீப காலங்களில் மக்களை அடித்து துன்புறுத்தி ’ஜெய் ஸ்ரீராம்’ எனும் வார்த்தையை பயன்படுத்த வைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வங்காள கலாச்சாரத்துடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ க்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறினார். மேற்கு வங்கத்தில் அன்னை துர்கையின் வழிபாடு தான் சிறந்த வழிபாடு எனவும், ராமநவமியுடன் துர்கா வழிபாட்டை ஒப்பிடமுடியாது எனவும் அமர்தியா சென் கூறியுள்ளார்.
அமர்த்தியா சென்னின் இந்த கருத்தால், ராமர் பகதர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பேச்சால் இந்து மத அமைப்பினர் வட்டாரங்களில் சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.