அமேசான் உள்பட 314 நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முன்னணி இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று அமேசான் என்பதும் இந்த நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் டெல்லியில் அமேசான் உள்பட 314 நிறுவனங்கள் இரவு முழுவதும் டெலிவரி செய்ய அனுமதி கேட்ட நிலையில் இதற்கு டெல்லி கவர்னர் அனுமதி அளித்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
இதனை அடுத்து டெல்லியில் இன்னும் சில தினங்களில் ஹோட்டல்கள் உணவகங்கள் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் 24 மணி நேரமும் டெலிவரி செய்யப்படும் என அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது