ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் ரஷ்யாவுக்கு எதிராக கிட்டதட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பதும் பார்த்து வருகிறோம்
ஆனால் அதே நேரத்தில் இந்தியா உள்பட ஒரு சில நாடுகள் மட்டும் ரஷ்யாவுக்கு ஆதரவளித்து வருகின்றன என்பதும் ரஷ்யாவுடன் வணிகப் போக்குவரத்து உட்பட அனைத்தையும் தொடர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவளிக்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய தலைமைக்கு ஆதரவளிப்பது உக்ரைன் மீதான அதன் போரை ஆதரிப்பது போல் ஆகும் என்றும் வரலாற்றில் எந்த பக்கத்தில் நிற்க வேண்டும் என இந்தியா சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா மறைமுகமாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.