Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தனிக்கட்சி தொடங்குகிறாரா அம்ரீந்தர் சிங்?

தனிக்கட்சி தொடங்குகிறாரா அம்ரீந்தர் சிங்?
, சனி, 2 அக்டோபர் 2021 (10:18 IST)
பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகிய அம்ரீந்தர் சிங் விரைவில் தனிக்கட்சி தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் பிறப்பித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்களுக்கும், சித்து அவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து சித்து அம்ரீந்தர் சிங் எதிர்ப்பையும் மீறி நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது கட்சியில் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக எம் எல் ஏக்களை திரட்டி வருகிறாராம் சித்து. இந்நிலையில் கட்சியில் தனக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று மாலை கட்சி நிர்வாகிகள் கூடும் கூட்டம் நடந்தது. அதற்கு முன்னதாக ஆளுநரை சந்தித்த அம்ரீந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பரபரப்பை கிளப்பினார். இதனால் பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதை மறுத்தார். இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் தனிக்கட்சி தொடங்குவது சம்மந்தமாகவும் விவசாய சங்கத் தலைவர்களின் ஆதரவை பெறுவது தொடர்பாகவும் விவாதித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமாவுக்கு திதி கொடுப்பதில் வாக்குவாதம்… அத்தையைக் குத்தி கொன்ற இளைஞர்!