Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களும் கடும் தண்டனை: ஆந்திராவில் சட்ட திருத்தம்!

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (21:53 IST)
பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களுக்குத் தண்டனை அளிக்கும் சட்டம் திருத்தங்களை முன்மொழியும் இந்தியாவின் முதல் மாநிலம் ஆந்திரா.  
 
இளம் பெண்கள் கடத்தப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்படும் பிரச்சனை ஆந்திராவில் அதிகமாக உள்ளது. பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களுக்குத் தண்டனை அளிக்கப்பட்டால், இந்த பிரச்சனையின் தீவிரம் குறையலாம். ஆந்திர அரசும் இதையே எண்ணுகிறது.
 
பெண்கள் கடத்தலை தடுக்கும்விதமாக, பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களும் தண்டனை அளிக்க ஆந்திர அரசு தயாராகிவருகிறது. மனித கடத்தலை தடுக்கவும், பொருத்தமான சட்ட திருத்தங்கள் ஏற்படுத்தவும் ஒரு ஆலோசனை குழவை அமைக்க ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழு இரண்டு மாதங்களில் அரசிடம் அறிக்கையை அளிக்கும்.
 
மற்ற எந்த மாநிலங்களும் இதுபோன்ற சட்ட நடவடிக்கையை கொண்டுவர முயற்சிக்காத நிலையில், ஆந்திரா மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆந்திரா அரசு அமைத்த குழு ஆய்வு செய்து, ஆந்திராவுக்கு ஏற்ற திட்டத்தை வடிவமைக்கும். இறுதி அறிக்கையை பார்த்த பின்னர் அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்