Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைநகரே இல்லதா ஆந்திரா? முடிவுக்கு வருவாரா ஜெகன்..

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (16:28 IST)
விசாகப்பட்டினத்தை ஆந்திர தலைநகராக்கலாம் பாஸ்டன் நிறுவன ஆலோசனையால் ஜெகன் மோகன் ரெட்டி குழப்பத்தில் இருப்பதாக தகவல். 
 
ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனைத்தொடர்ந்து ஜெகன் பல அறிவிப்புகளை மக்களுக்காக வழங்கி வருகிறார்.  
 
இந்நிலையில் தனது அடுத்த அதிரடியாக ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறார். இது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டமன்றத்தில் பேசியதாவது...  
 
ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. வடக்கு கடலோர ஆந்திரா, மத்திய ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளின் 3 நகரங்கள் தலைநகரங்களாக இருக்கும்.   
 
விசாகப்பட்டினம் உள்கட்டுமான வசதிகளுடன் இருப்பதால் அதனை முதன்மை தலைநகராகவும், அமராவதியை சட்டமன்றத் தலைநகராகவும் , கர்நூலை நீதித்துறை தலைநகராகவும் உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். 
 
ஆனால் தற்போது ஆந்திராவின் தலைநகர் குறித்து அமெரிக்க ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டன்சியுடன் ஜெகன் மோகன் ரெட்டி நடத்திய ஆலோசனையில், விசாகப்பட்டினத்தை தேர்தெடுப்பது வளர்ச்சிக்கு உஅதவும் என கூறப்பட்டுள்ளதால், ஆந்திராவின் தலைநகர் எதுவென தேர்ந்தெடுக்கும் குழப்பத்தில் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments