ஆந்திராவில் இருந்து மதுப்பிரியர்கள் தமிழகம் படையெடுப்பதை தவிர்க்க விலையை குறைத்துள்ளது ஆந்திர அரசு.
தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளை நடத்தி வருவது போல ஆந்திராவில் அரசின் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ஆந்திரா அரசு மதுபானங்களின் விலையை 50 சதவீதம் உயர்த்தியது. இது மதுப்பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதனால் தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆந்திர மதுப்பிரியர்கள் மது வாங்குவதும், அங்கிருந்து ஆந்திராவிற்கும் மதுவை கடத்துவதாகவும் இருந்து வந்தனர். இதனால் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க யோசித்த ஆந்திர அரசு மதுபானங்களின் விலையை தற்போது 20 சதவீதம் வரை குறைத்துள்ளது.