ஆந்திராவில் எலுரு பகுதியில் உள்ள மக்கள் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு, புயல், மழை உள்ளிட்ட பாதிப்புகளால் 2020ம் ஆண்டு மோசமான ஆண்டாக கருதப்பட்டு வருகிறது. சதிகோட்பாட்டாளர்கள் சிலர் 2020ல் உலகம் அழிந்துவிடும் என கூறி மேலும் மக்களிடையே பீதியை கிளப்பி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் பரவி வரும் மர்ம நோய் மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் மக்கள் மர்மமான நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வாந்தி, மயக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவதுடன் திகில் ஏற்படுத்தும் விதமாக அலறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நோய் எதனால் பரவுகிறது என்பது புரியாமல் மருத்துவர்கள் குழம்பியுள்ள நிலையில் இந்த மர்ம நோயால் ஒருவர் பலியாகியுள்ளார். இதுவரை 292 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.