Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீடியாக்காரங்க பில்டப் பண்றாங்க.. நான் ஒரு பரம ஏழை! – சரண்டர் ஆன அனில் அம்பானி!

Advertiesment
National
, திங்கள், 28 செப்டம்பர் 2020 (08:13 IST)
சீன வங்கிகளில் கடன் வாங்கி செலுத்தாத விவகாரத்தில் பேசிய அனில் அம்பானி தன்னிடம் சொத்துகளே இல்லை என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குடும்ப நிறுவனங்கள் தங்கள் கடனை மறுசீரமைக்க சீன வங்கிகளிடம் 51 லட்சம் கோடி கடன் வாங்கியிருந்தன. அனில் அம்பானி ஜவாப்தாரியாக இருந்து இந்த பணத்தை பெற்ற நிலையில் இன்னும் கடனை கட்டாததால் சீன வங்கி நிறுவனங்கள் லண்டன் நீதிமன்றத்தை நாடியுள்ளன.

இந்த வழக்கில் அறிக்கை அளித்துள்ள வங்கிகள் அனில் அம்பானிக்கு சொந்தமான சொகுசு பங்களாக்கள், கார்கள், அவரது மனைவியின் ஹெலிகாப்டர் என அவரிடம் ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தன. இந்த வழக்கில் அனில் அம்பானி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர் தனக்கு சொந்தமாக எந்த சொத்தும் இல்லையென்றும், சொத்துக்கள் ரிலையன்ஸ் குழுமத்தின் பெயரிலேயே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மீடியாக்கள் தான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது போல பெரிதுப்படுத்தி காட்டுகிறார்கள். நான் மிகவும் எளிய வாழ்க்கை வாழ்கிறேன். இந்த வழக்கிற்கே எனது மனைவியின் நகைகளை விற்றுதான் செலவு செய்கிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் சீன வங்கிகள் அனில் அம்பானியின் சொத்துகளை பறிமுதல் செய்ய லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3.33 கோடி ஆனது உலக கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 60.70 லட்சம்!