திருப்பதி மலை பாதையில் நடமாடிய சிறுத்தையை சமீபத்தில் வனத்துறையினர் பிடித்த நிலையில் தற்போது மேலும் ஒரு சிறுத்தை நடமாடி வருவதை கண்டு பக்தர்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதால் 6 வயது சிறுமி உயிர் இழந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் பல புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
மேலும் சிறுமியை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர் என்பதும் சம்பவ இடத்தில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் திருப்பதி மலை பாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பார்த்த பக்தர்கள் அலறி அடித்து ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த சிறுத்தையையும் பிடிப்பதற்காக வனத்துறையினர் கண்காணிப்பில் இருப்பதாகவும் இந்த சிறுத்தையை கூண்டு வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.