சங்கத்தில் ராம்லீலா மைதானத்தில் பேசிய மோடியின் பேச்சு ஹிட்லரின் பேச்சோடு ஒத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் மோடியை அர்பன் ஹிட்லர் என இயக்குனர் அனுராக் காஷ்யப் கருத்து தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை பற்றி சமீபத்தில் பேசிய மோடி போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது பற்றி பேசினார் .அப்போது ’என்னை வேண்டுமானால் எரியுங்கள். ஆனால் பொதுச் சொத்துக்களை எந்த சேதமும் படுத்தாதீர்கள். என்னை வெறுங்கள்; ஆனால் தேசத்தை வெறுக்காதீர்கள் .என்னை வெறுப்பவர்கள் யார் என்று எனக்கு தெரியும்’ என வீராவேசமாக பேசினார்.
மோடியின் இந்த பேச்சை பாஜக ஆதரவாளர்கள் பகிர உடனடியாக இன்னொரு வீடியோ கவனத்துக்கு வந்தது. ஹிட்லர் தனது ஆட்சிக் காலத்தில் மக்களிடம் பேசும் போது இதே வார்த்தைகளில் பேசி இருப்பதை சுட்டிக்காட்டி பலரும் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டனர். அந்த இரு வீடியோக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் மோடியை அர்பன் ஹிட்லர் என வர்ணித்துள்ளார். தொடர்ந்து பாஜக அரசையும் மோடியையும் இயக்குனர் அனுராக் காஷ்யப் விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.