பிரபல பின்னணி பாடகி அனுராதா பட்வால் தனது தாய் என்றும், அவர் தன்னை சிறுவயதில் தத்து கொடுத்துவிட்டதாகவும் கேரள இளம்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிரபல பாலிவுட் பின்னணி பாடகி அனுராதா பட்வால் பத்மஸ்ரீ உள்பட பல விருதுகளை வென்றவர். இவர் தமிழிலும் சில பக்தி பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது பல விருதுகளை இவர் வென்றுள்ள இவர் மீது கேரள நீதிமன்றத்தில் கர்மாலா மோடெக்ஸ் என்ற பெண் தனது தாய் அனுராதா பட்வால் என்றும், தான் பிறந்து 4 நாட்களில் தனது தாய் அனுராதா பட்வால், தன்னை பொன்னச்சன் என்பவரிடம் தத்து கொடுத்துவிட்டதாகவும், அதன்பின்னர் பொன்னச்சன் மற்றும் அவரது மனைவி அக்னீஸ் ஆகியோர் தன்னை வளர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நான் பிறந்தபோது தனது தாய் அனுராதா பாடகியாக பிசியாக இருந்தால் தன்னை வளர்த்தால் தனது பாடல் தொழிலில் கவனம் செலுத்த முடியாது என்பதால், அனுராதா தன்னை வளர்க்குமாறு அவர்களிடம் கொடுத்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த உண்மையை அண்மையில் தனது தந்தை இறப்பதற்கு முன்னர் தெரிவித்ததாகவும், ஆனால் இந்த உண்மை தனது வளர்ப்புத் தாயான அக்னீஸ்க்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து தனது தந்தையின் மரணத்திற்கு பின்னர், தான் பலமுறை அனுராதாவிடம் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அவர் பேச மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ள கர்மாலா, தனது தாயான அனுராதா பட்வால், தனது வாழ்வாரத்திற்காக ரூ.50 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது