சமீபத்தில், இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என சட்டம் இயற்றப்பட்ட நிலையில், மருத்துவப் படிப்புகளில் முது நிலை நீட் தேர்வுக்கான கட் ஆஃப் அனைத்து வகை பிரிவினருக்கும் 15% குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 9 ஆம்த தேதி, இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று, பொதுப்பிரிவினருக்கு 35% சதவீதமும், பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30% சதவீதமும், ஓபிசி, எஸ்.சி. எஸ்டி ஆகிய பிரிவினருக்கு 25% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார சேவை இயக்ககம் அறிவித்துள்ளது.