உலக் அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலின் மார்பிள் கட்டிடப் பகுதிகளைப் பார்க்க இனி கூடுதலாக 200 ரூபாய் கட்டிடம் வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்ப்ட்டுள்ளது.
4 நூற்றாண்டுகளுக்கு முன்னர் முகலாய மன்னர் ஷாஜஹான் தன் காதல் மனைவி மும்தாஸின் நினைவாக கட்டிய நினைவிடம் இன்று வரலாற்று சின்னமாக விளங்குகிறது, தாஜ்மகால். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை உலகெங்கும் உள்ள மக்கள் காதலின் சின்னமாகக் கருதி வருகின்றனர். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் தாஜ்மஹாலை சுற்றிப்பர்ப்பதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர். இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒன்றாக தாஜ்மஹால் இருந்து வருகிறது. தாஜ்மாஹாலின், முக்கிய பகுதி வெள்ளைநிற மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ளது.இந்த பகுதிக்கு அடியில்தான் மும்தாஸ் மற்றும் ஷாஜகானின் நினைவிடம் உள்ளது.
அதனால் இந்தக் கட்டிடம் மற்றும் அதை சுற்றியுள்ள மினராக்களைப் பார்வையிட வரும் பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது. இதனால் இந்த கட்டிடம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டது. அந்தக் கட்டிடங்களின் மேல் ஏறி செல்லாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து இனி தாஜ்மஹாலின் முக்கியக் கட்டிடங்களை சுற்றிப் பார்ப்பதற்கு கூடுதல் கட்டனமாக 200 ரூபாய் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்பொருள் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளதாவது ‘இதுவரை செலுத்தப்பட்டுவரும் ரூ.50-ல் தாஜ்மகால் வளாகத்தில் நுழைந்து அதை தூரத்தில் மட்டுமே பார்க்க முடியும். அருகில் மற்றும் உள்ளே நுழைந்து பார்க்க வேண்டுமானால் இனி மொத்தம் ரூ250 செலுத்த வேண்டும். வெளிநாட்டினருக்கு ரூ.1300, சார்க் நாட்டவர்கள் ரூ.340-க்கு பதிலாக ரூ.740 செலுத்த வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளனர்.