புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என கெஜ்ரிவால் கோரிக்கை.
தென்னாப்பிரிக்கா ஹாங்காங் உள்ளிட்ட ஒருசில நாடுகளில் புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய வகை வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வகைகளிலேயே மிகவும் வீரியமானது என்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மோசமான வைரஸ் என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். புதிய வகை வைரஸ் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திவர்களை கூட தாக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உருமாறிய கொரோனா பல்வேறு உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் பெரும் சிரமங்களுக்கு பிறகு நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் புதிய வகை கொரோனா பாதிப்பை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.