Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்லாங்குழல் ஊதினால் பசு அதிகமாக பால் கொடுக்கும் – சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.எல்.ஏ

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (19:32 IST)
சமீப காலமாக புராண கதைகளில் எழுதப்பட்ட பல விஷயங்களை நவீன அறிவியலுடன் இணைத்து பேசும் போக்கு அதிகரித்து வருகிறது. முக்கியமாக அரசியல் தலைவர்கள் பலர் இதுபோல பேச்சுகளை அதிகம் பேசி வருகின்றனர்.

சமீபத்தில் அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ திலிப் குமார் அங்கு நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது அதில் அவர் ”இசை மற்றும் நடனம் ஆகியவை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்து ஆடியதால் பசுக்கள் அதிகம் பால் கறந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று பேசியுள்ளார்.

இதை கேட்டு பலர் அதிர்ச்சியடைந்தனர். அது குறித்து விளக்கம் கேட்டபோது குஜராத்தை சேர்ந்த ஒரு தன்னார்வ நிறுவனம் செய்த ஆராய்ச்சியில் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

புராணத்தில் கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசித்தால் பசுக்கள் தானாகவே பால் சொறியும் என கூறப்பட்டுள்ள கதையை அறிவியல்பூர்வமாக உண்மை என்று நிரூபிக்கதான் அவர் இப்படி பேசியுள்ளார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments