மருத்துவம் தொடர்பான தவறான தகவல் அளித்த பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி உள்ளிட்டவை குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை யோகா குரு பாபா ராம்தேவ் அவர்களுக்கு சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தெரிவித்ததாக இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது எந்த ஒரு மருத்துவ முறைக்கும் எதிராக கருத்து தெரிவிக்க கூடாது, மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
ஆனால் அதன் பின்னரும் மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்கள் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு வந்ததை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு ஏன் எழுப்பக் மேற்கொள்ளக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டது
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கூறுவதாகவும் தெரிவித்தார். ஆனால் எழுத்துப்பூர்வ மன்னிப்பை ஏன் தாக்கல் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து எழுத்து பூர்வமாக அவர் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது