Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீரவ் மோடிக்கு ஜாமீன் மறுப்பு – நீதிபதியின் நகைச்சுவை பேச்சு

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (09:25 IST)
லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடிக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைதான வைர வியாபாரி நிரவ்மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிரவ்மோடிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என இந்திய அதிகாரிகள் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஜாமீன் மனுவை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர் மீண்டும் ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். நேற்று (ஜூலை 25) மீண்டும் தலைமை நீதிபதி எம்மா அர்புத்நாத் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் அவரது ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்தார்.

அப்போது பேசிய நீதிபதி ‘ 2020 ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக, ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் விசாரணைக்கான தேதிகள் அறிவிக்கப்படும்.  மேலும் இங்கிலாந்தில் நிலவும் தட்பெவெப்ப நிலைகள் சிறையில் அதிகமாக இல்லை’ என நகைச்சுவையாகக் கூறினார். அதற்குப் பதிலளித்த நீரவ் மோடி ‘ஆம் வெப்பநிலை நன்றாக இருக்கிறது’ எனக் கூறி சிரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments