Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழி இறைச்சி விற்பனை.....முட்டை சாப்பிட தடை !

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (20:50 IST)
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கோழி இறைச்சு மற்றும் முட்டைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னமும் மீண்டு வராத நிலையில் புதிதாக தோன்றியுள்ள பறவைக்காய்ச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் முதலில் கண்டறியப்பட்ட பறவைக்காய்ச்சல் பின்னர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லியிலும் காகங்கள், வாத்துகள் இறந்து கிடந்த நிலையில் அவற்றை பரிசோதனை செய்ததில் அவற்றிற்கு பறவைக்காய்ச்சல் இருந்தது தெரிய வந்துள்ளது. டெல்லியை தொடர்ந்து உத்தரகாண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக 10 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், பறவைக் காய்ச்சல் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கோழி இறைச்சு மற்றும் முட்டைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி அரசு கூறியுள்ளதாவது :

தலைநகர் டெல்லி மாநகராட்சியின் வசந்தவிஹார், கிரேட்டர், கைலாஷ், ரோஷ்நாரா கார்டன், காஷ்மீரி, கீர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கோழி இறைச்சி மற்றும் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறைச்சிக் கூடங்களில் கோழி இறைச்சிகளை விற்கக்கூடாது எனவும் ஹோட்டலில் ஆபாயில்,பாயா போன்ற உணவுகளை விற்பனை செயய்க்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments