தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் குறைவான வாக்கு சதவீதம் பதிவானது என்பதும் குறிப்பாக சென்னையில் மிகவும் குறைவான வாக்கு சதவீதம் பதிவானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பெங்களூரில் உள்ள மூன்று தொகுதிகளில் சென்னை விட குறைவாக வாக்குப்பதிவு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் உள்ள முன்னணி ஹோட்டல் உள்பட பல நிறுவனங்கள் வாக்களித்து வருபவருக்கு பல இலவச அறிவிப்புகளை அறிவித்ததால் பெங்களூரில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று தேர்தல் முடிந்து வாக்கு சதவீதம் குறித்த தகவல் வெளியாகி உள்ள நிலையில் பெங்களூரில் மிகவும் குறைவாக மத்திய சென்ட்ரல் தொகுதியில் 52.81 சதவீத வாக்கு சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது
தமிழகத்தில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், கர்நாடகாவில் நேற்றைய தேர்தலில் 69.23 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக பெங்களூரில் தெற்கில் 53.15 சதவீதம், பெங்களூர் சென்ட்ரலில் 52.81 சதவீத ஓட்டுகள் என குறைந்த அளவில் தான் பதிவாகி உள்ளது.
மத்திய சென்னையில் 53.96 சதவீதம், வடசென்னையில் 60.11 சதவீதம், தென்சென்னையில் 54.17 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில் சென்னையை விட குறைவாகவே பெங்களூரில் வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.