பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைத்து ஒன்றாக்கும் அறிவிப்பை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த வங்கிகள் இணைப்பை வங்கி ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதனால் பொதுத்துறை வங்கி ஊழியர்களின் எண்ணிக்கைக் குறையும் என்றும் பல்வேறு பொருளாதார இக்கட்டுகள் நடக்கும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டதால் இன்றே மக்கள் தங்களுக்குத் தேவையான பரிவர்த்தனைகளை செய்துகொள்ளுமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.