Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகளோ வரிசையில்: பணக்காரர்களுக்கு குறுக்கு வழியில் பணம் கொடுக்கும் வங்கி ஊழியர்கள்- வீடியோ

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (12:15 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பை அடுத்து, பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் காத்திருக்கின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தற்போது ரூ.2000 மட்டுமே மாற்ற முடியும் என்ற அரசின் அறிவிப்பை அடுத்து மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.



ஏழைகள் மட்டுமே வரிசையில் காத்திருக்கின்றனர். வசதி படைத்தவர்கள் ஒருவரும் இல்லையே என்றும், வசதி படைத்தவர்கள் பலர் வங்கிகளில் தனது செல்வாக்கை பயன்படுத்தி பணத்தை மாற்றி செல்கின்றனர் என்றும் சமூகவலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துவருவது உண்மைதான் என்பது போல தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் வட மா நிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் வங்கியின் பின்புறம் வந்து நிற்கிறார். இதனைக் கண்ட வங்கி ஊழியர் ஒருவர் அவருக்கு சிக்னல் கொடுத்த பின்பு, அந்த நபர் ஜன்னல் அருகே சென்று பணத்தை பெற்றுக் கொண்டு எதுவும் நடக்காதது போல் செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments