Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் ஸ்பான்சரை நிராகரிக்க முடியாது! – பிசிசிஐ உறுதி!

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2020 (14:36 IST)
சீனாவுடனான மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்களை இந்தியாவில் தடை செய்ய குரல்கள் எழுந்துள்ள நிலையில் பிசிசிஐ-யில் ஸ்பான்சர் செய்து வரும் சீன செல்போன் நிறுவனத்தை ஸ்பான்ஸரில் இருந்து நீக்கவும் குரல்கள் எழுந்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன – இந்திய ராணுவத்திடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 34 வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் சீனா- இந்தியா இடையே பெரும் பதற்றம் எழுந்துள்ளது, சீன பொருட்களை புறக்கணிக்க கோரி இந்தியாவின் பல பகுதிகளிலும் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் பிரபலமாக உள்ள சீன செல்போன் நிறுவனமான விவோ இந்திய கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சராக செயல்பட்டு வருகிறது. சீனாவுடன் மோதல் உள்ள நிலையில் விவோ நிறுவனத்தின் ஸ்பான்சரை இந்திய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் “விவோ நிறுவனத்தின் மூலமாக ஐபிஎல் போட்டிகளின் வழியாக ஆண்டுக்கு 440 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதிலிருந்து அரசுக்கு வரியாக 40 சதவீதம் அளிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தால் வருமானம் கிடைக்கும்போது ஏன் அதை தவிர்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments