இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மொபைல்போன்களில் ஆபாச படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தும் முடியவில்லை
இந்த நிலையில் வாரணாசியை சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அமைப்பின் டெவலப்பர் ஒருவர் புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். ஹர ஹர மகாதேவ் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆப்-ஐ மொபைலில் இன்ஸ்டால் செய்த பின்னர், ஆபாச இணையதளத்தை தேடினால், அந்த இணையதளம் தானாகவே பிளாக் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக பஜனை இணையதளம் தோன்றும்
இந்த முயற்சிக்கு நாடெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த ஆப், மொபைல் போன்களுக்கு மட்டுமின்றி டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் செயல்படும். இந்த ஆப் பரவலாக அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டால், ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.