பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சற்றுமுன்னர் கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சி செய்து வந்தார் என்பதும் ஆனால் இடையில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக ஆதரவை முறித்துக்கொள்ள நிதிஷ்குமார் முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் இன்று பீகார் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின் செய்தியாளர்களை நிதிஷ்குமார் சந்தித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே அனைத்து எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் ஒருமித்த கருத்தாக இருந்ததால் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்
இதனை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது