Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பறவைக் காய்ச்சல் :கேரளா கோழிக்கோட்டில் 20 ஆயிரம் கோழிகள் அழிப்பு !

பறவைக் காய்ச்சல் :கேரளா கோழிக்கோட்டில் 20 ஆயிரம் கோழிகள் அழிப்பு !
, திங்கள், 9 மார்ச் 2020 (19:10 IST)
பறவைக் காய்ச்சல் :கேரளா கோழிக்கோட்டில் 20 ஆயிரம் கோழிகள் அழிப்பு !

கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியால் கோழிக்கோடு என்ற மாவட்டத்தில் 3 ஊராட்சிகளில் 20 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது.
 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்சல் நோய் பரவியுள்ளதால், அங்குள்ள மூன்று ஊராட்சிகளில் 20 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கொடியாத்தூர், வேங்கேரி, சாத்தமங்மலம் ஆகிய பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பகுதிகளில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு கோழி, கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும்,  கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 5 பேரில் 3 வயது குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரி பள்ளிகளுக்கும் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரைக்கும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ்? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்