காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடும் நிலையில் நேற்று திடீரென கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்தார். தென்னிந்தியாவில் ராகுல்காந்தி முதல்முறையாக போட்டியிடுவதால் அவரை வெற்றி பெற வைக்க கேரள காங்கிரஸார் களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் ராகுல்காந்தி வெற்றி பெற்றால் இந்த தொகுதி பிரதமர் தொகுதியாக மாறும் வாய்ப்பு இருப்பதால் இந்த தொகுதி மக்களும் அவருக்கு வாக்களிக்க தயங்க மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது
இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்ரீ துஷார் வேலப்பள்ளி என்பவர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ துஷார் வேலப்பள்ளி பாஜக அணியில் இடம்பெற்றுள்ள பாரத் தர்ம ஜனசேனா கட்சி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ துஷார் வேலப்பள்ளி என்பவர் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது