Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானா தேர்தல்.. காங்கிரஸ் தோல்விக்கு ஆம் ஆத்மி காரணமா?

Mahendran
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (17:14 IST)
"ஹரியானா மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென முடிவுகள் மாறி பாஜக கூட்டணிக்கு ஆதரவாக முன்னணியின் நிலவரம் வந்து கொண்டிருக்கிறது. 
 
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 37 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், இரண்டு தொகுதிகளில் மற்றவையும் முன்னிலையில் இருக்கும் நிலையில் பாஜக அங்கு ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. 
 
இந்நிலையில், ஹரியானாவில் இந்திய கூட்டணியுடன் சேராமல் ஆம் ஆத்மி கட்சி தனித்து நின்றது தான் இந்தியா கூட்டணியின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீரில் வெற்றி பெற்றது. இதேபோன்று, ஆம் ஆத்மியும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தால் ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
ஹரியானா மாநிலம் என்பது ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களின் சொந்த மாநிலம் என்பதும், ஆனால் அம்மாநிலத்தில் அவரால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதே நேரத்தில் ஆறுதலாக காஷ்மீரில் முதல் முறையாக ஒரு தொகுதியை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது."
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments