மேற்கு வங்க மாநிலத்தில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் .213 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.வரும் மே 5 ஆம் தேதி மம்தா பானர்ஜி முதல்வர் பதவி ஏற்கவுள்ளார்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸார் தேர்தலில் தோல்வி அடைந்த பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே திரிணாமுல் காங்கிரஸால் நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து, மே 5 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பாஜக தர்ணா போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், இரண்டுநாள் பயணமாக பாஜக தலைவர் ஜேபி.நட்டா மேற்கு வங்கம் சென்ரு தொண்டர்களைச் சந்திக்கவுள்ளார்.