Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் கைது..

Arun Prasath
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (11:31 IST)
சட்டக்கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து, பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சின்மயானந்தா இன்று கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசம், ஷாஜஹான்பூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை வெளியிட்டவுடன் அந்த மாணவி மாயமானார்.

பின்பு அந்த மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டுக் கொண்டுவந்து உச்சநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மாணவியின் தந்தை புகார் அளித்ததை தொடர்ந்து சின்மயானந்தா மீது வழக்கு பதியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சின்மயானந்தாவிடம் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வந்தது. இதனிடையே மாணவியின் தந்தை சிறப்பு விசாரணை குழுவிற்கு 43 வீடியோக்களை ஆதாரமாக வழங்கினார். அந்த மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று அமைச்சர் சின்மயானந்தா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்