ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் பத்து நாட்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவின் முன்னாள் அமைச்சர் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநில முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் முன்னிலையில் பாஜகவின் முன்னாள் அமைச்சர் அமின் பதான் என்பவர் இணைந்தார்.
அமீன் பதான் ராஜஸ்தான் மாநில சிறுபான்மை மோட்சா மற்றும் மாநில ஹஜ் கமிட்டியின் முன்னாள் பாஜக தலைவராக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் வரும் நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திடீரென பத்து நாட்களுக்கு முன்னர் பாஜகவின் முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.