நேற்று நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வாக்குகள் பிரிந்ததால் பாஜகவுக்கு கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நாடு முழுவதும் காலியான மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டால் தேர்தல் நடைபெறவில்லை.
ஆனால் அதே நேரத்தில் கர்நாடகம் ராஜஸ்தான் உள்பட ஒருசில மாநிலங்களில் மாநிலங்களவை எம்பிகளுக்கான தேர்தல் நடந்தது. இந்த நிலையில் இதில் கர்நாடக மாநிலத்தில் 4 மாநிலங்களவை இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு 3 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளது
மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் வாக்குகள் பிரிந்ததால் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு இடம் கூடுதலாக கிடைத்ததாக தெரிகிறது. நாடு முழுவதும் நடந்த மாநிலங்கள் தேர்தலில் 16 இடங்களில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது