விமர்சிப்பவர்களை தேசத்துரோகிகள் என்பது பாஜகவின் உத்தி என தெலங்கானா முதலமைச்சர் பாஜகவை ஒட்டுமொத்தமாக சாடியுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே வாத்தை மோதல் அதிகரித்துள்ளது. சமீபத்தில் தேவையில்லாமல் பேசினால் நாக்கை அறுப்போம் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பாஜக மாநில தலைவரை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான VAT வரியை குறைக்கவும் என பாஜக ஆளும் கட்சிக்கு அறிவுறுத்திய போது, அம்மாநில முதல்வர் நாங்கள் வாட் வரியை உயர்த்தவில்லை. டிஆர்எஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து VAT வரி உயர்த்தப்படவில்லை. எந்த முட்டாள் VAT அதிகப்படுத்தினாரோ அதே முட்டாள் தான் அதை குறைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில் தற்போது பாஜகவின் அரசியல் போட்டியாளர்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் மூலம் துன்புறுத்து வருகிறது. பாஜகவை விமர்சனம் செய்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவது பாஜக அரசின் உத்தி என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.