புலம்பெயர் தொழிலாளர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது ட்விட்டரில் பதிவு செய்த பாஜக பிரபலம் தெரியாமல் செய்துவிட்டேன் என்றும் நிபந்தனை இன்றி மன்னிப்பு கேட்க தயார் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புலம்பெயர் தொழிலாளர் குறித்து பாஜகவின் பிரசாந்த் உம்ராவ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வதந்தி பரப்பிய நிலையில் அவர் மீது தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்த நிலையில் பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் தெரியாமல் செய்துவிட்டேன் என்றும் தவறு என்று தெரிந்தவுடன் அந்த ட்விட்டை நீக்கிவிட்டேன் என்றும் இந்த விவகாரத்தில் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பேன் என்றும் உச்சநீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளார்.
இதனை அடுத்து இதுகுறித்து பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.