Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநில தேர்தல்: செமி ஃபைனலில் வெற்றி பெற்று விட்டதா பாஜக?

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (12:06 IST)
நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தல் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான செமி பைனல் என்று ஊடகங்கள் விமர்சித்த நிலையில் இந்த செமி பைனலில் பாஜக வெற்றி பெற்றுவிட்டதாக கருதப்படுகிறது
 
பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியை 267 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள பாஜக, கடந்த சட்டசபை தேர்தலை விட 50 இடங்கள் குறைவாக இருந்தாலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து என்பது குறிப்பிடத்தக்கது
 
உத்தரகாண்ட்  மாநிலத்திலும் ஆட்சி அமைக்க முப்பத்தி ஆறு தொகுதிகள் தேவை என்ற நிலையில் 44 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது என்பதால் கிட்டத்தட்ட ஆட்சி அமைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
மணிப்பூரில் 29 தொகுதிகளிலும், கோவாவில் 18 தொகுதிகளிலும் பாஜக  முன்னிலையில் உள்ளது. 5 மாநில தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுவதால் இதே முடிவுதான் கிட்டதட்ட 2024 தேர்தலிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments