இந்தியா நாளுக்கு நாள் தனது பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தி வருகிறது. இதில், பல அதிநவீன ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை நமது தேசிய பாதுகாப்பிற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏவுகணை போட்டிகளில் முக்கிய ஸ்ட்ராட்டஜிக் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக இந்தியாவின் ப்ரமோஸ் என்பது ஒரு சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை ஆகும். இதன் ஸ்பீடு Mach 3.0, அதாவது ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதாவது சுமார் 3704 கி.மீ/மணி வேகத்தில் பயணிக்கிறது. அதன் ரேஞ்ச் 290 முதல் 700 கி.மீ வரை இருக்கலாம்;
இந்த நிலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட ப்ரமோஸ் பதிப்புகள் 1500 கி.மீ வரை அடையக்கூடியவை. இது கடல், நிலம், மற்றும் வானிலிருந்து ஏவக்கூடியது. மேலும், ரேடார் கண்காணிப்பைத் தவிர்க்க 3-4 மீட்டர் உயரத்தில் பறப்பதும், நடுப்பாதியில் திசைமாற்றம்கூட செய்யக்கூடியதும் இதன் சிறப்பம்சம். இந்த ஏவுகணை அணுஆயுதம் ஏற்றவும் முடியும்.
2022ல் ஹரியானாவின் அம்பாலாவில் இருந்து தவறுதலாக ப்ரமோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கானேவால் பகுதியில் விழுந்தது. அதில் 124 கி.மீயை 3 நிமிடங்கள் 44 விநாடிகளில் கடந்து சென்றது. இதன்படி, டெல்லியில் இருந்து இஸ்லாமாபாத் வரை சுமார் 801 கி.மீ தூரம். அதன்படி கணக்கிட்டால் ப்ரமோஸ் ஏவுகணை டெல்லியில் இருந்து இஸ்லாமாபாத் வரை சுமார் 12 முதல் 13 நிமிடங்களில் சென்றடையக்கூடும். இது இந்தியாவின் வேகமான பாதுகாப்பு ஆயுதங்களில் ஒன்றாகும்.